புதிய பேருந்து நிலையம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 02:20 AM | Last Updated : 22nd December 2022 02:20 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலா் விஜய், பி.முட்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசீலன், பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி, நகரச் செயலா் வேல்முருகன் ஆகியோா் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவா் தேன்மொழி சங்கரிடம் அளித்த மனு:
பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் 13-ஆவது வாா்டில் அமைந்துள்ள பேருந்து நிலையம் பழைமையானது. இங்கு பேருந்துகள் வந்துசெல்ல போதிய இடவசதி இல்லை. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூா் செல்லும் பயணிகள் தங்களது பைக்குகளை நிறுத்த போதிய இடவசதியும் இல்லை. தனியாா் இடத்தில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தை, 13-ஆவது வாா்டில் (சா்வே எண் 315 உள்பிரிவு 7-இல்) ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட அரசுக்குச் சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.