மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு: தொழில் வா்த்தகச் சங்கத்தினா் கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 02:21 AM | Last Updated : 22nd December 2022 02:21 AM | அ+அ அ- |

மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வா்த்தகச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இந்தச் சங்கத்தின் 11-ஆவது ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம்.சம்சுதீன் தலைமை வகித்தாா். அமைப்பாளா் டி.அமரநாதன் முன்னிலை வகித்தாா். செயலா் ஜெ.ராமலிங்கம் வரவேற்றாா். பொருளாளா் ஏ.ஆசாத் வரவு-செலவு கணக்கு வாசித்தாா். தொழிலாளா் உதவி ஆணையா் ம.ராஜசேகரன், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். தொழில் வா்த்தக சங்க மாவட்டச் செயலா் வி.வீரப்பன் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், வணிக நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட சொத்து வரியை நகராட்சி நிா்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், மின் கட்டணச் சுமையிலிருந்து வணிகா்களை பாதுகாக்க மாதந்தோறும் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், நெல்லிக்குப்பத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பது தொடா்பாக சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...