பயிா் பாதுகாப்புப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 27th February 2022 12:43 AM | Last Updated : 27th February 2022 12:43 AM | அ+அ அ- |

மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் (திருச்சி), விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.
மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநா் சி.இளங்கோவன் தொடக்க உரையாற்றினாா். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நா.ஸ்ரீராம், தொழில்நுட்ப வல்லுநா் சு.மருதாச்சலம், உதவி இயக்குநா் ச.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். முகாமில், பயிா் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று வயல் சூழல் ஆய்வின் முக்கியத்துவம், உயிரியல் முறையில் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தல், பூச்சி விரட்டி தயாரித்தல், பாதுகாப்பான முறையில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தல் குறித்து விளக்கினா். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.