தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலா்கள் சங்க கடலூா் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.உதயகுமாா் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் இளஞ்சூரியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.முருகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் ஆா்.சையது அபுதாஹிா் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், 2022-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு, புதிய உறுப்பினா் தோ்தல், 2019-2020-ஆம் ஆண்டுகளுக்கு துணை வட்டாட்சியா் பட்டியல் வெளியிடக் கோருதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.