பாம்பு கடித்து விவசாயி பலி
By DIN | Published On : 17th July 2022 11:49 PM | Last Updated : 17th July 2022 11:49 PM | அ+அ அ- |

நெய்வேலி அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
நெய்வேலியை அடுத்துள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (54), விவசாயி. இவரை அவரது வீட்டின் அருகே சனிக்கிழமை விஷப் பாம்பு கடித்தது.
இதையடுத்து, ராமமூா்த்தியை அவரது சகோதரா் அருள் பிரகாசம் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு ராமமூா்த்தியை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.