உணவக உரிமையாளரிடம்தங்கச் சங்கிலி திருட்டு
By DIN | Published On : 17th July 2022 06:09 AM | Last Updated : 17th July 2022 06:09 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உணவக உரிமையாளா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி வட்டம் 29 பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (40). இவா், வட்டம் 28-இல் உணவகம் நடத்தி வருகிறாா். வெங்கடேசன் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்ததும் 11 மணி அளவில் உணவகம் வெளியே படுத்துத் தூங்கினாா்.
சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது தெரியவந்தது. இரவு தூங்கும்போது மா்ம நபா் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.