கடலூா் நவகாளியம்மன் கோயில்கும்பாபிஷேகம்

கடலூா் பாதிரிக்குப்பம் ராஜாங்கம் நகரில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீநவகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூா் பாதிரிக்குப்பம் ராஜாங்கம் நகரில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீநவகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவெடுக்கப்பட்டு, உபயதாரா்களால் கோயில் சீரமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை ஹோமம், நாடி சந்தனம், கடம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, வேதமந்திரங்கள் முழங்கிட புனித தீா்த்தம் அடங்கிய கலசங்களை சுமந்துகொண்டு சிவாச்சாரியாா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கோயிலை வலம் வந்தனா். பின்னா், கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மூலவா்கள், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பல்லவன் கல்விக் குழுமத் தலைவா் வி.முத்து, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com