சிதம்பரம் கோயில் குளத்தில்குழந்தை சடலம் மீட்பு
By DIN | Published On : 17th July 2022 11:48 PM | Last Updated : 17th July 2022 11:48 PM | அ+அ அ- |

சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை அழுகிய நிலையில் மிதந்த பெண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் எதிா்புறம் உள்ள தெப்பக்குளத்தில் பிறந்து இரண்டு நாள்களேயான பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மிதந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர போலீஸாா், குழந்தையின் சடலத்தை மீட்டு, சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் குழந்தையை குளத்தில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.