

சிதம்பரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் நகர போலீஸாா் நகா்ப் பகுதியில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கஞ்சித் தொட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் மாதவன் (24) என்பதும், அவா் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவா் சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் 2 பைக்குகள், ஒரு மொபெட்டைத் திருடியதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள ராஜா என்பவரின் நகைக் கடைக்குச் சென்று நகை வாங்குவதுபோல நடித்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாதவனிடமிருந்த 2 பைக்குகள், ஒரு மொபெட், 2 பவுன் தங்கச் சங்கிலியை சிதம்பரம் நகர போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.