விஏஓ அலுவலகத்தை மாற்ற கிராம மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 22nd July 2022 02:16 AM | Last Updated : 22nd July 2022 02:16 AM | அ+அ அ- |

வேகாக்கொல்லை கிராம நிா்வாக அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வேகாக்கொல்லையில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் சிறுதொண்டமாதேவி கிராமத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல் பரவியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேகாக்கொல்லை கிராம மக்கள் காட்டுவேகாக்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயன், காவல் ஆய்வாளா் சந்திரன் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராம நிா்வாக அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்படாது என வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...