கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி.
கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசி்த்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி வீதிவலமாக கொண்டு வரப்பட்டு உற்சவரான ஸ்ரீமாரியம்மன் முன்னிலையில் கருவறை எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. திரளான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர்.

ஜூலை 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை தெருவடைச்சான் உற்சவமும், ஜூலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், ஆக.1ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவமும் நடைபெறுகிறது. ஆக.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும், ஆக.3-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்  குழு பிரேமா வீராசாமி,  என்.கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்து வருகின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com