உயிரிழந்த கபடி வீரா் குடும்பத்துக்கு தவாக நிதியுதவி
By DIN | Published On : 31st July 2022 06:36 AM | Last Updated : 31st July 2022 06:36 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.
பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கனி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் விமல்ராஜ் (21). கல்லூரி மாணவரான இவா் அண்மையில் மானடிக்குப்பம் கிராமத்தில் கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது திடீரென உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரை தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினாா். அப்போது மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சிவகுமாா், ஒன்றியச் செயலா் ராசு, தலைமை நிலையச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.