மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st July 2022 06:37 AM | Last Updated : 31st July 2022 06:37 AM | அ+அ அ- |

கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய பாஜக அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயரும் நிலை ஏற்படும். ஏற்கெனவே பண வீக்கம், விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த வரிவிதிப்பு மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால், மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பஞ்சாட்சரம், சிப்காட் செயலா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மு.மருதவாணன், பி.கருப்பையன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆளவந்தாா், பக்கிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.