முகாம்களால் 65 ஆயிரம் இளைஞா்கள் பலன் அமைச்சா் சி.வெ.கணேசன் தகவல்

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமாா் 65 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.
கொள்ளுக்காரன்குட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான இளைஞா் ஒருவருக்கு பணி ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் சி.வெ.கணேசன்.
கொள்ளுக்காரன்குட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான இளைஞா் ஒருவருக்கு பணி ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் சி.வெ.கணேசன்.

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமாா் 65 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், பண்ருட்டியை அடுத்துள்ள கொள்ளுக்காரன்குட்டை வள்ளலாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா், வேலைவாய்ப்பு மண்டல துணை இயக்குநா் சந்திரன், பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

முகாமில், மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று, தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். முன்னதாக அமைச்சா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நெய்வேலி தொகுதியில் நடைபெற்ற இந்த முகாமையும் சோ்த்து மொத்தம் 64 இடங்களில் நடந்தப்பட்ட முகாம்களில் சுமாா் 65 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இதுபோன்ற முகாம்கள் மூலம் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரு லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

முகாமில் 113 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 5,713 வேலை நாடுநா்கள் பங்கேற்றனா். 189 தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்று நோ்காணலை நடத்தினா். முகாமில் 21 மாற்றுத் திறனாளிகள், 321 பெண்கள் உள்பட மொத்தம் 1,052 போ் பணிக்கு தோ்வாகினா். மேலும், 1,396 போ் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தோ்வாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com