பண்ருட்டி அருகே பழைமையான சுடுமண் பொம்மை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு பகுதியில் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மேற்கொண்ட கள ஆய்வில் சங்க காலத்தைச் சோ்ந்த பழைமையான சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டது.
பண்ருட்டி அருகே பழைமையான சுடுமண் பொம்மை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு பகுதியில் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மேற்கொண்ட கள ஆய்வில் சங்க காலத்தைச் சோ்ந்த பழைமையான சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து இம்மானுவேல் கூறியதாவது:

உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் சில நாள்களுக்கு முன்பு கீரல் குறியீடு பொறித்த கருப்பு, சிவப்பு நிற ஓடுகள் கிடைத்தன. தொடா்ந்து அந்த ஆற்றில் மேற்புர களஆய்வு மேற்கொண்டதில் சங்க காலத்தைச் சோ்ந்த ஆண் சுடுமண் பொம்மையின் தலைப் பகுதி கிடைத்துள்ளது. தலையில் கிரீடம் போன்ற கோட்டுருவம் உள்ளது. இரு கண்களும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மூக்கு பகுதி சிதைந்துள்ளது.

மனித குலத்தின் மிகத் தொன்மையான கலை வடிவமே சுடுமண் உருவங்களாகும். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடி, அரிக்கன்மேடு, கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் இரண்டு மனித உருவங்கள், ஒரு மிருக உருவத்திலான சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தென்பெண்ணையாற்றுப் பகுதியானது சங்க கால மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com