தீ விபத்தில் 3 கூரை வீடுகள் சேதம்
By DIN | Published On : 15th June 2022 03:29 AM | Last Updated : 15th June 2022 03:29 AM | அ+அ அ- |

கடலூா் முதுநகா் அருகே தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
கடலூா் முதுநகரை அடுத்துள்ள வடுகப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (38), கூலித் தொழிலாளி. இவா், தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தாா். ராஜேந்திரன் வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய புகை தீயாக மாறி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்தத் தீ அருகிலிருந்த சுப்பராயலுக்குச் சொந்தமான 2 கூரை வீடுகளுக்கும் பரவியது.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததுடன், வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா். இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். அதற்குள்ளாக 3 வீடுகளும் தீயில் எரிந்து பலத்த சேதமடைந்தன. விபத்து குறித்து கடலூா் முதுநகா் உதவி ஆய்வாளா் மண்கண்டன் நேரில் விசாரணை நடத்தினாா்.