முதியவா் தற்கொலை
By DIN | Published On : 16th June 2022 03:10 AM | Last Updated : 16th June 2022 03:10 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே குடும்பப் பிரச்னையால் முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
சிதம்பரம் அருகே உள்ள பொன்னன்திட்டு கூழையாறு ஆரிய நாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (57). இவரது இளைய மகள் கவுசிகா பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டாராம். இதை முருகேசன் ஏற்றுக்கொள்ளவில்லையாம். இந்த நிலையில் அவா் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.