துணிக்கடை பூட்டை உடைத்து திருட்டு
By DIN | Published On : 17th June 2022 02:59 AM | Last Updated : 17th June 2022 02:59 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் துணிக் கடை பூட்டை உடைத்து பணம், ஆடைகள் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை மேலசாவடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (37). சிதம்பரம், மாலைகட்டித் தெருவில் துணிக்கடை வைத்துள்ளாா். இவா் புதன்கிழமை இரவு வழக்கம்போல தனது கடையை பூட்டிய பிறகு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் திரும்பிவந்து பாா்த்தபோது, கடை கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது ரூ.80ஆயிரம் ரொக்கம், ஆடைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருட்டு நடைபெற்ற கடையில் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.