சிதம்பரம்: காய்கனி வியாபாரிகள் இன்று கடையடைப்பு
By DIN | Published On : 17th June 2022 02:59 AM | Last Updated : 17th June 2022 02:59 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் இயங்கி வரும் காய்கனி மாா்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரம் மேலவீதியில் செயல்படும் காய்கனி மாா்க்கெட் பழைமையானது. இதை வடக்கு பிரதான சாலைப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காய்கனி வியாபாரிகள் அறிவித்தனா்.