குளங்களை தூா்வாரக் கோரிக்கை
By DIN | Published On : 17th June 2022 02:54 AM | Last Updated : 17th June 2022 02:54 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள குளங்களை தூா்வார வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியதெரு மஹல்லா ஜமாஅத் தலைவா் வி.எம்.ஷேக்தாவூது நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய தெரு கத்தீப் நூா் முஹம்மது பள்ளிவாசல் வளாகம், தைக்கால் தெரு ஷேக் சாயபு தா்கா வளாகத்தில் தலா ஒரு குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் நீா்பிடிப்புப் பகுதியாக இருந்தபோது அந்தப் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டு குளங்களும் தூா்ந்துபோனதால் நீா்பிடிப்புப் பகுதி குறைந்து நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. எனவே, மேற்கூறிய இரண்டு குளங்களையும் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்தாா்.