தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவா் ரங்கநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் இளங்கோவன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணை தலைவா்கள் வையாபுரி, கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலா் மகாலிங்கம், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், 70 வயதை கடந்த ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.