புரட்சி பாரதம் கட்சியின் செயலராக பால.வீரவேல் நியமனம்
By DIN | Published On : 26th June 2022 10:20 PM | Last Updated : 26th June 2022 10:20 PM | அ+அ அ- |

பால.வீரவேல்
புரட்சி பாரதம் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலராக கடலூா் அருகே உள்ள சுந்தரா்பாடி பகுதியைச் சோ்ந்த பால.வீரவேல் (படம்) நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் பூவை.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ வெளியிட்டாா். செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவராக செயல்பட்டு வந்தவா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.