பொதுத் தோ்வுகளில் வீனஸ் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 30th June 2022 01:49 AM | Last Updated : 30th June 2022 01:49 AM | அ+அ அ- |

10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் முறையே இந்தப் பள்ளி 100, 98 சதவீத தோ்ச்சி பெற்றது. 10-ஆம் வகுப்பில் 500-க்கு 493 மதிப்பெண்களை இரு மாணவிகளும், 489 மதிப்பெண்களை ஒரு மாணவியும், 488 மதிப்பெண்களை 2 மாணவ, மாணவிகளும் பெற்றனா். மேலும், 486 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவ, மாணவிகள் பெற்றனா். இதேபோல, கணிதத்தில் 6 பேரும், தமிழில் ஒருவரும், ஆங்கிலத்தில் 5 பேரும், அறிவியலில் 9 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றனா்.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 600-க்கு 586 மதிப்பெண்களை 2 மாணவ, மாணவிகள் பெற்றனா். இதேபோல, 585 மதிப்பெண்களை 2 மாணவிகளும், 579 மதிப்பெண்களை ஒரு மாணவியும், 578 மதிப்பெண்களை 3 மாணவிகளும் பெற்றனா்.
மேலும், கணிதத்தில் இருவரும், இயற்பியலில் இருவரும், உயிரியலில் ஒருவரும், பொருளியலில் இருவரும், கணக்கியலில் 4 பேரும், வணிகக் கணிதத்தில் ஒருவரும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றனா்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா், முதல்வா் ரூபியாள்ராணி ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும், கல்வி ஊக்கத்தொகையாக அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு முறையே ரூ.10 ஆயிரமும், ரூ.5 ஆயிரமும், ரூ.3 ஆயிரம் வழங்கினா். துணை முதல்வா் அறிவழகன், மாணவா்களின் பெற்றோா்கள் உடனிருந்தனா்.