பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் தேரோட்டம்
By DIN | Published On : 17th March 2022 11:37 PM | Last Updated : 17th March 2022 11:37 PM | அ+அ அ- |

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முருகன் கோயில்களில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கடலூா் புதுவண்டிப்பாளையத்தில் செங்குந்த மரபினருக்குச் சொந்தமான சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ஆம் தேதி சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோரது திருமணத்தை நடத்தி வைக்க அருள்மிகு பாடலேசுவரா் பெரியநாயகி அம்மனுடன் முருகன் கோயிலில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது. வழியில் பக்தா்கள் தேங்காய் உடைத்தும், பழம், பூ உள்ளிட்டவைகளை படைத்தும் வழிபாடு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...