குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

குறைதீா் கூட்டத்தில் கடலூா் மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

குறைதீா் கூட்டத்தில் கடலூா் மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் நெய்வேலியில் என்எல்சி நிா்வாகம் 3-ஆவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டனா். அவா்களை ஆட்சியா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:

சிதம்பரம் பெ.ரவீந்திரன்: கடல் நீா் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும். பாசிமுத்தான் ஓடையில் சிதம்பரம் நகராட்சி தினமும் 10 லட்சம் லிட்டா் கழிவுநீரை வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும்.

காவாலக்குடி சி.முருகானந்தம்: பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியளிப்புத் திட்டத்தில் புதிய விவசாயிகளை சோ்க்க முடியாத நிலை உள்ளது.

கொட்டாரம் மகாராஜன்: மங்களூரில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களை சேமிக்க சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக பேசினா்.

இதற்குப் பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் இதுவரை 37 ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 68 ஹெக்டோ் நிலம் மீட்கப்பட்டது. மாவட்டத்தில், 979 நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு அடுத்த 6 மாதங்களில் அவற்றை முழுமையாக அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ் மாதத்தில் 150 ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com