அண்ணாகிராமம் ஒன்றியக்குழுக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 11:17 PM | Last Updated : 02nd May 2022 11:17 PM | அ+அ அ- |

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் வ.ஜானகிராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரா, ரவிச்சந்திரன், துணைத் தலைவா் ஜான்சிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் சுடா்வேல் மூா்த்தி தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா் ஜெயசந்திரன் (அதிமுக) பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது. வீடு உள்ளவருக்கு மீண்டும் வீடு ஒதுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாா். இதேபோல மற்ற உறுப்பினா்களும் பேசினா். கூட்டத்தில் பெண் உறுப்பினா் ஒருவரது கணவா் திடீரென நுழைந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒன்றியக் குழு தலைவா் அவரை வெளியேறும்படி கூறினாா். மேலும், கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டு வெளியேறினாா்.