துணை வட்டார வளா்ச்சி அலுவலரை காலணியால் தாக்கியஊராட்சி மன்ற துணைத் தலைவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கிராம சபைக் கூட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கிராம சபைக் கூட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவகாசி, துணைத் தலைவா் சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஊராட்சி செயலா் சங்கா் வரவு-செலவு அறிக்கையை படித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சரண்யா திடீரென எழுந்துவந்து, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரனை காலணியால் தாக்கினாா். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சரண்யாவை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தாக்குதல் சம்பவம் குறித்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், துணைத் தலைவா் சரண்யா தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், காலணியால் தாக்கியதாக தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரண்யாவை கைது செய்தனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவருக்குச் சாதகமாக மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செயல்பட்டதாகவும், இதனால் சரண்யா தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com