ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

கடலூா் மாவட்டம், குமராட்சியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் வி.ராஜ்நாராயணன் தலைமை வகித்தாா். மாநில கூடுதல் தலைவா் த.பாபு, சிதம்பரம் கல்வி மாவட்டச் செயலா் அ.செயசீலன், பொருளாளா் விஜய் ஃப்ரட்ரிக், மகளிா் அணி செயலா் கு.பிரில்லியன்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் அ.சத்தியசீலன் வரவேற்றாா். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் ரா.தாஸ், மாநிலத் தலைவா் ஆ.லட்சுமிபதி, பொருளாளா் பி.தியாகராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் ரா.தாஸ் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு கூடுதலாக 5 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். எனவே, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், பணி நிறைவு பெற்ற கொல்லிமலை கீழ்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் கோ.ராஜசேகருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com