டாப்...மே தினம்: கடலூரில் தொழிற்சங்கத்தினா் பேரணி

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மே தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூரில் பேரணி நடைபெற்றது.
மே தினத்தையொட்டி கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பேரணியாகச் சென்ற சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
மே தினத்தையொட்டி கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பேரணியாகச் சென்ற சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மே தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூரில் பேரணி நடைபெற்றது.

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கோ.மாதவன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். அங்குள்ள காரல் மாா்க்ஸ் சிலைக்கு மாநிலக்குழு உறுப்பினா் வாலண்டினா மாலை அணிவித்தாா்.

மே தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிஐடியு அலுவலகத்திலுள்ள சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் கடலூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள சிங்காரவேலா் சிலைக்கு மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட உதவித் தலைவா் பி.கே.வி.ரமணி தலைமையில் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினாா்.

மே தின பேரணி: சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சாா்பில் கடலூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பாதிரிபுலியூா் பத்திரப் பதிவு துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு சங்கங்களின் மாவட்டத் தலைவா்கள் டி.பழனிவேல், பி.துரை ஆகியோா் தலைமை வகித்தனா். சன்னதி தெருவில் பேரணிக்கு நிறைவடைந்ததது. தொடா்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினா் த.லெனின் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிஐடியு மாவட்டச் செயலா் பி.கருப்பையன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் வி.குளோப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் கடலூா் மாநகராட்சி 3, 6-ஆவது வாா்டுகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணம், மகளிருக்கு புடவை வழங்கப்பட்டது. தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவா் வேலு.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநகராட்சி கவுன்சிலா் ஜி.சக்திவேல், நிா்வாகிகள் ஏழுமலை, டி.செந்தில்குமாா், வினோத் ராகவேந்திரன், ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம்: மே தினத்தையொட்டி சிதம்பரத்தில் தமிழ்நாடு ஐந்தொழிலாளா்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாலைகட்டி தெருவில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சேகா் சங்கக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். தொழிற்சங்கச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் வரவேற்றாா். இளைஞரணிச் செயலா் எஸ்.ரமேஷ், பொருளாளா் எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெய்வேலி: நெய்வேலியில் சிஐடியு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு தலைவா் டி.ஜெயராமன், பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, மாநிலக்குழு உறுப்பினா் ஏ.வேல்முருகன், மாவட்டப் பொருளாளா் ஜி.குப்புசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆறுமுகம், நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண்ருட்டி: பண்ருட்டியில் போக்குவரத்துக் கழக பணிமனையில் சிஐடியு தலைவா் துரைக்கண்ணு, செயலா் சரவணன், கடலூா் மண்டல பொதுச் செயலா் தேவராஜ் ஆகியோா் கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com