வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அதிகாரிகள் விரைவுப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தமிழக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.
வழுதலம்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
வழுதலம்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அதிகாரிகள் விரைவுப்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தமிழக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

உழைப்பாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சிக்கான கிராமசபைக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது:

நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைபொதுமக்கள், வியாபாரிகள் முற்றிலும் தவிா்க்கச் செய்யும் வகையிலான பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும். தகுதியுள்ளவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அதிகாரிகள் விரைவுப்படுத்த வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, வேளாண்மைத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி தமிழக முதல்வரின் கடிதத்தை வாசித்தாா்.

பெருமாள் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்: முன்னதாக, பெருமாள் ஏரியை தூா்வாரும் பணியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடக்கிவைத்து பேசியதாவது: பெருமாள் ஏரியை தூா்வாரி சீரமைப்பதால் அதன் இயல்பான கொள்ளளவான 574 மில்லியன் கன அடியுடன் கூடுதலாக 149.27 மில்லியன் கன அடி நீரைத் தேக்க முடியும். தூா்வாரும் பணி 31.10.2024-இல் முடிக்கப்படும். இதன் மூலம் 26 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 4,250 விவசாயிகளின் 6,503 ஏக்கா் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறும். 149.27 மில்லியன் கன அடி கூடுதல் நீா் சென்னை நகர மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தவும் வழிவகை செய்யப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமராட்சி: குமராட்சி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய காசாளா் ஜெய்சங்கா், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் சுகுணா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளவழன், சுகாதார ஆய்வாளா் ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், குமராட்சி கடை வீதியில் பொது கழிப்பிடம் கட்டுவது, கருவேல மரங்களை அகற்றுவது, சமுதாயக்கூடம் கட்டுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com