

கடலூா்: தமிழ்நாடு அரசு மோட்டாா் வண்டிகள் பராமரிப்பு நிறுவனத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு மோட்டாா் வண்டிகள் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்துப் பணியிடங்களுக்கான பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு தொழில்நுட்பப் பதவிகளுக்கு இணையான ஊதியம், பணிமனைகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஆா்.பாலசுப்ரமணியன் தொடக்க உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு வணிகவரி பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் என்.ஜனாா்த்தனன், அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ப.துளசி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா். சங்கப் பொருளாளா் ஜெ.பண்டரிநாதன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.