அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்: பண்ருட்டி ஒன்றியத்தில் 9 கிராமங்கள் தோ்வு

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள 9 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள 9 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரன், ராதிகா, துணைத் தலைவா் தேவகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா். ஒன்றியக் குழு தலைவா் சபா.பாலமுருகன் பேசியதாவது:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்துக்கு ரூ.4 கோடியில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு பூா்வாங்க அனுமதி அளித்துள்ளது. அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ள 9 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில் திமுக நிா்வாகிகள், பெண் உறுப்பினா்களின் உறவினா்கள், வெளி நபா்கள் கலந்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அடுத்த கூட்டத்தில் பாா்வையாளா்கள் பங்கேற்பது தவிா்க்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com