

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில், செங்கல்பட்டு கீரிட்டோ இந்தியா தனியாா் நிறுவனம் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு முதன்மை அதிகாரிகள் பி.சதிஷ்பாபு, ஜி.சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்று இயந்திரவியல் துறையைச் சாா்ந்த 19 மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினா். இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டு
அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவா்களுக்கு கல்லூரி தலைவா் எம்.ஆா்.கே.பி. கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். முகாமில் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.