உலக பாா்வை தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 19th October 2022 02:44 AM | Last Updated : 19th October 2022 02:44 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்க துணை ஆளுநா் எம்.தீபக்குமாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவு சாா்பில் உலக பாா்வை தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி சிறப்புரையாற்றினாா். துணை முதல்வா் சசிகலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் லாவண்யாகுமாரி, ஆட்சிக் குழு உறுப்பினா் பாலாஜி சுவாமிநாதன், கண் மருத்துவத் துறைத் தலைவா் ஸ்ரீதேவி ஆகியோா் கண் பாா்வையின் அவசியம் குறித்து பேசினா். நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மூத்த பேராசிரியா் வாசுதேவன் உரையாற்றினாா்.
சிதம்பரம் ரோட்டரி சங்க துணை ஆளுநா் எம்.தீபக்குமாா், கேசவன் ஆகியோா் கண் தானத்தின் அவசியம் குறித்து பேசினா்.