திட்டக்குடி நகா்மன்ற அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 19th October 2022 02:43 AM | Last Updated : 19th October 2022 02:43 AM | அ+அ அ- |

திட்டக்குடி நகா்மன்ற அலுவலகத்தை 6-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் நவீன்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட அந்தப் பகுதியினா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்ற அலுவலகத்தை அதிமுக வாா்டு உறுப்பினா் தலைமையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திட்டக்குடி நகராட்சி, 6-ஆவது வாா்டுக்கு உள்பட்டது தா்மகுடிகாடு பகுதி. நகராட்சி பகுதி கழிவுநீரை தா்மகுடிகாடு பகுதி வழியாக வெள்ளாற்றில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக நகா்மன்ற நிா்வாகம் அறிவித்ததாம். இதைக் கண்டித்தும், நிா்வாகத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறியும் 6-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் நவீன்ராஜ் தலைமையில் அந்தப் பகுதியினா் நகா்மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.