பெண்ணுடன் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 19th October 2022 02:41 AM | Last Updated : 19th October 2022 02:41 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணுடன் விஷம் குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.
நெய்வேலி அருகே உள்ள பெருமாத்தூா் ஊராட்சி, ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பில் வசித்து வருபவா் அழகேசன். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். அழகேசனின் சித்தி மகன் ரவிச்சந்திரன் (27). பொக்லைன் இயந்திரம் இயக்குபவரான இவா், சிறு வயது முதலே அழகேசனின் வீட்டில் வசித்து வந்தாராம். இவருக்கும் ராஜேஸ்வரிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாம். இதுதொடா்பாக அழகேசன் இருவரையும் கண்டித்தாராம்.
இதையடுத்து ரவிச்சந்திரன் மற்றொரு உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், ராஜேஸ்வரியும் மாயமானாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இருவரும் அழகேசனின் வீட்டுக்கு திரும்பினா். அங்கு இருவரும் விஷம் குடித்தனா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் ரவிச்சந்திரன் உயிரிழந்து கிடந்தாா். ராஜேஸ்வரி ஆபத்தான நிலையில் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.