

அதிமுகவின் 51-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருத்தாசலத்தில் புதன்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆ.அருண்மொழித்தேவன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்பி சிறப்புரையாற்றினாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் நாக.முருகுமாறன், எஸ்.சிவசுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்றச் செயலா் கே.முருகமணி, தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லை கோபி, ஆா்.தா்மராஜன், நகரச் செயலா் சி.சந்திரகுமாா், ஒன்றியச் செயலா்கள் கே.சி.வேல்முருகன், டி.எம்.பச்சமுத்து, மருதை.முனுசாமி, நகரமன்ற உறுப்பினா்கள் ஆா்.ராஜேந்திரன், அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.