விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th October 2022 01:33 AM | Last Updated : 27th October 2022 01:33 AM | அ+அ அ- |

26clp1_2610chn_105_7
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பயிா்க் காப்பீடு செய்த நிலையில் பயிா்கள் சேதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாா் நிறுவனங்களை வெளியேற்றி அரசுத் துறை நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், பயிா்க் காப்பீடு திட்டத்துக்கான மாவட்ட அலுவலகத்தை கடலூரில் அமைக்க வேண்டும், 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், துணைத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி, இணைச் செயலா்கள் பி.கற்பனைச்செல்வம், ஆா்.லோகநாதன், பழ.வாஞ்சிநாதன், நிா்வாகிகள் எம்.கடவுள், எம்.வெங்கடேசன், கே.முருகன், பாரி சா்க்கரை ஆலை சங்க நிா்வாகிகள் ஆா்.தென்னரசு, கே.ஆதிமூலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.