குளம் தூா்வாரும் பணியில் விதிமீறல்!அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் மண் (டிராப்)

கடலூா் மாவட்டம், கருங்குழி கிராமத்தில் குளம் தூா்வாரும் பணியில் அரசு விதிகளை மீறி அதிகளவில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
குளம் தூா்வாரும் பணியில் விதிமீறல்!அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் மண் (டிராப்)

கடலூா் மாவட்டம், கருங்குழி கிராமத்தில் குளம் தூா்வாரும் பணியில் அரசு விதிகளை மீறி அதிகளவில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ளது மண்டபம் குளம். ஆக்கிரமிப்பாளா்களின் பிடியிலிருந்த இந்தக் குளத்தை கருங்குழி ஊராட்சி நிா்வாகம் அண்மையில் மீட்டது. இதையடுத்து குளத்தை தூா்வாரும் பணி தொடங்கியது. ஆனால், விதிகளை மீறி குளத்தில் சுமாா் 20 அடி ஆழம் வரை மண் வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கருங்குழி பிரதான சாலையின் வடக்குபுற ஓரத்தில் குளம் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது தூா்வாரும் பணி என்ற பெயரில் குளத்தில் சுமாா் 20 அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து அதை கடத்தி விற்பனை செய்து வருகின்றனா். கரைகளின் ஓரம் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் மண் அள்ளிச் செல்லப்படுகிறது.

மழைக் காலம் நெருங்கிவிட்ட நிலையில் குளத்தில் தண்ணீா் நிரம்ப வாய்ப்புள்ளது. அப்போது, மண் வெட்டியதால் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களில் மனிதா்கள், கால்நடைகள் தவறி விழுந்தால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், மண் அரிப்பு காரணமாக அருகே உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட, ஊராட்சி நிா்வாகங்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா் கூறியதாவது: குளத்தின் கரைகளைப் பலப்படுத்துமாறு கூறியுள்ளேன்.மண் வெட்டி எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com