அங்கன்வாடி பணியாளா்கள் அக்.1-இல் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th September 2022 01:44 AM | Last Updated : 09th September 2022 01:44 AM | அ+அ அ- |

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி, சத்துணவு திட்டப் பணியாளா்கள் அக்டோபா் 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றுவோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவா்களுக்கு நிரந்தர கால முறை ஊதியம் வழங்கக் கோரியும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க முன்வர வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற அக்டோபா் 1-ஆம் தேதி சென்னை, கடலூா், சிவகங்கை உள்ளிட்ட 7 மையங்களில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
பேட்டியின்போது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத் தலைவா் சரவணன், அங்கன்வாடி பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் சீனிவாசன், பொதுச் செயலா் தெய்வசிகாமணி, மாவட்டச் செயலா் ஞானதேசிகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.