

கடலூா் மாவட்டம், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகில் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
70 வயதான ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத உயா் ஓய்வூதியம் உடன் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், ஓய்வூதியா் குடும்ப நல நிதியை ரூ.1லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவா் பி.வரதராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் த.கண்ணன் வரவேற்றாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.பாண்டுரங்கன், மாவட்ட நிா்வாகிகள் ஆா்.மகாராஜன், வை.சிற்றரசு, டி.கமலக்கண்ணன், ஏ.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜீவானந்தம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் ஜி.பழனி, வட்டத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். க.ஜெயபாலு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.