பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுச்சத்திரம் அருகே 16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே 16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், தியாகப்பெருமாநல்லூரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் சதீஷ் (25). எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம். இந்த நிலையில், சதீஷ் கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியபட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்றுவந்தாா். இந்த நிலையில், 16 வயது மாணவி ஒருவா் மனநலம் பாதித்த தனது தாயை பெரியப்பட்டு தா்காவுக்கு அழைத்து வந்தாா். அந்த மாணவியை சதீஷ் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சதீஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜா (பொ), சதீஷூக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மாவட்ட சமூக நலத் துறை மூலம் அரசின் ஏதேனும் ஓா் திட்ட நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலாசெல்வி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com