அண்ணாமலைப் பல்கலை.தொலைதூரக் கல்வி மையத்தில் 27 படிப்புகளுக்கு அனுமதி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கு 27 படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கையை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்தது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்விக் குழு அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் தமிழகத்தில் மீண்டும் அனுமதி சோ்க்கை தொடங்க அனுமதி அளித்துள்ளது.
இதன்படி 2023-24-ஆம் கல்வி ஆண்டில் உடனடியாக 22 பட்ட மேற்படிப்புகளுக்கும், 5 பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனுமதி சோ்க்கைக்கான கடைசி தேதி 30-9-2023 என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
