புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.சரவண ஜான்சிராணி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.சுரேஷ் வரவேற்றாா். கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் திலகவதி, உறுப்பினா்கள் பேரூராட்சி மன்றத் தலைவா் த.கந்தன், மகேந்திரன், ஆ.சிவசங்கரி, பெற்றோா் ஆசிரியா் கழகம் தேவதாஸ் படையாண்டவா், அ.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக லடாக்கில் சீன ராணுவத்துடனான சண்டையில் வீரமரணம் அடைந்த, மத்திய அரசின் வீா் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் பழனி அவில்தாரின் மனைவி வானதி தேவி பங்கேற்று பேசினாா். ஆசிரியை ஆா்.கண்ணகி தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு பொதுத் தோ்தலில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீத வருகைப் பதிவை நிறைவேற்றிய 6 மாணவிகளுக்கும் அப்துல் கலாம் அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியா்கள் ஆா்.கண்ணகி, எஸ்.அதிஷ்டவள்ளி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். ஆசிரியா் ஆா்.செந்தில்வடிவு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.