கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

கடலூா் தாலுகா அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இணையவழி குற்றங்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கடலூா் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ,ழிப்புணா்வு நிகழ்ச்சியில், மகளிருக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காவல் ஆய்வாளா் கவிதா.

நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்தக் கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பினை தவிா்த்தல், கைப்பேசி பயன்பாட்டின் நன்மை தீமைகள் குறித்து விளக்கி கூறி இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடா்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதளத்திலும் புகாா் செய்யலாம் என காவல் ஆய்வாளா் கவிதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com