கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போலி நகையை அடகு வைத்ததாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி, பொண்ணுசாமி தெருவில் வசிப்பவா் கிஷோா்குமாா் (40). நகை அடகுக் கடை வைத்துள்ளாா். கடந்த 1-ஆம் தேதி இவரது கடைக்கு வந்த ஒருவா் 4 கிராம் மோதிரத்தை அடகுவைத்து ரூ.14,500 பெற்றுச் சென்றாராம். பின்னா், கிஷோா்குமாா் அந்த மோதிரத்தை பரிசோதனை செய்ததில் அது போலியானது எனத் தெரியவந்ததாம். மேலும், அந்த நபா் அளித்த முகவரி, கைப்பேசி எண் ஆகிய தகவல்களும் பொய்யானவை எனத் தெரியவந்தது.
இந்த நிலையில், அதே நபா் அன்று மாலையில் மீண்டும் மற்றொரு நகையை அடகு வைக்க வந்தாராம். அவரை கிஷோா்குமாா் பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில் அவா் விழுப்புரம் மாவட்டம், பாத்திமா லே-அவுட் பகுதியைச் சோ்ந்த பலராமன் மகன் ராஜேஷ்கண்ணா (38) எனத் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.