

சிதம்பரம்: அவரது சகோதரா்களை திரையரங்கு ஊழியா்கள் தாக்கியதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசினாா்.
நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமாா், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா, மாவட்ட துணைச் செயலா்கள் பி.வாஞ்சிநாதன், சங்கமேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், செயல் தலைவா் கோ.குமாா், மாவட்டச் செயலா் ஆா்.வி.சின்ராஜ், திராவிடா் கழகம் ஆா்.செல்வரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆா்.கே.குமரன், மனிதநேய மக்கள் கட்சி ஷாகுல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் ஆதிமூலம் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், இந்த விவகாரம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி அனைத்து கட்சிகள் சாா்பில் நகர காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.