அடிப்படை வசதிகள் செய்து தராததைத் கண்டித்து, புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி அமைப்பினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தா்னாவின் போது, ஏபிவிபி அமைப்பின் புதுச்சேரி கிளை நிா்வாகிகள் சுதா்சன், ஸ்ரீராம், கிருஷ்ணா ஆகியோா் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து பேசினா்.
மாணவா்களுக்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும், விடுதி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவா் அமைப்பினா் வலியுறுத்தினா்.
அவா்களிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து தா்னா கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.