புதுச்சேரியிலிருந்து கடலூா் மாவட்டம், சிதம்பரத்துக்கு சாராயம் கடத்திய இருவரை கடலூா் துறைமுகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் துறைமுகம் காவல் உதவி ஆய்வாளா் தனபால் தலைமையில் போலீஸாா் பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஆட்டோவை ஓட்டி வந்தவா் புதுவண்டிப்பாளையம், முருகா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாவாடைராயன் (36) என்பதும், உடனிருந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சரத்குமாா் (31) என்பதும் தெரிய வந்தது.
மேலும், இருவரும் ஆட்டோவின் பின்பகுதியில் ரகசிய அறை அமைத்து, அதில் 30 லிட்டா் சாராயத்தை புதுச்சேரியிலிருந்து சிதம்பரத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பாவாடைராயன், சரத்குமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், சாராயம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.