

கடலூா் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூா் அங்காள பரமேஸ்வரி, சிதம்பரம் ஸ்ரீஜெயகணபதி, பண்ருட்டி, அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். விழாவில் கடலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
பண்ருட்டியில் சென்னை சாலையில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை உற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், அறங்காவலா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.